முதலீட்டைத் திரும்பப் பெறுதல்... பொருளாதாரச் சீர்திருத்தமா, வெறும் கண்துடைப்பா?

ஆர்.மோகனப் பிரபு, சார்ட்டட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

ரலாற்றில் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடி  அளவிற்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று, தனது முதலீட்டைத் திரும்பப் (Disinvestment) பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.80,000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனைச் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்காண்டுகளாகவே, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைச் சரிவு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை ஆகியவை மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைப் பெருமளவுக்குக் குறைக்க உதவியுள்ளன. அதேசமயம், ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் (Rural Electrification Corporation) பங்கை மற்றொரு பொதுத்துறை நிறுவனத்திற்கு (Power Finance Corporation) விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவானது பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick