மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி!

டிசம்பர் 26-ம் தேதி என்றாலே சுனாமிதான் அனைவருக்கும் நினைவில் வரும். ஆனால், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இனி டிசம்பர்  26 என்றால், மத்திய அரசாங்கம் திடீரெனக் கொண்டுவந்த புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் மட்டுமே நினைவுக்கு வரும். இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசாங்கம் சில திருத்தங்களை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. அதேசமயம், மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு ஆதரவான கருத்துகளும் சந்தையில் உள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளினால் யாருக்கு லாபம், யாருக்குப் பாதகம் என்பது குறித்து பார்ப்பதற்குமுன், இப்போது வந்திருக்கும் புதிய விதிமுறைகளைப் பற்றி பார்ப்போம்.

   அரசின் அறிவிப்பு என்ன?

மார்க்கெட் பிளேஸ் மாடல் முறையில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. அதாவது, இணையதளம் மட்டுமே நடத்தி, மற்ற ரீடெய்ல் நிறுவனங்களிடம் பொருள்களை வாங்கி விற்கும்பட்சத்தில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்வென்ட்ரி மாடலில் (பொருள்களை வாங்கி வைத்து விற்பனை செய்வது) முழுமையாக அந்நிய முதலீடு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர் களுக்குத் தெரியும்வகையில் ஒரு நிறுவனத்தை நடத்தும் அதேசமயத்தில்,  இன்னொரு ரீடெய்ல் நிறுவனத்தையும் நடத்திக் கொண்டிருக்கும். உதாரணத்துக்கு, ஃப்ளிப்கார்ட் என்பது நமக்குத் தெரிந்த இணையதளம். ஆனால், ஃப்ளிப்கார்ட்மூலம் வாங்கப்படும் பெரும்பாலான பொருள்கள் டபிள்யூ.எஸ் ரீடெய்ல் என்னும் நிறுவனம்மூலமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick