குறையும் வாகன விற்பனை... என்னதான் காரணம்?

வ்வொரு மாதத்தின் முதல் தேதி யிலேயே இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகிவிடுகிறது. இவை  பலராலும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. காரணம், வாகனங்கள் விற்பனை அதிகமாக இருந்தால், பொருளாதாரம் நன்றாக இருக்கிறது; வாகன விற்பனை குறைகிறது எனில், பொருளாதார சுணக்கம் உள்பட பல விஷயங்கள் காரணங் களாக இருக்கலாம். தற்போது, வாகனங்களின் விற்பனை குறைய என்ன காரணம், ஒவ்வொரு நிறுவனத்தின் விற்பனை எவ்வளவு குறைந்திருக்கிறது, இந்தத் துறை சார்ந்த பங்குகளை என்ன செய்யலாம் என்பது குறித்து ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘கடந்த 2018 டிசம்பரில், பஜாஜ் ஆட்டோ, எஸ்கார்ட்ஸ் நிறுவனங்களின் விற்பனை அதிக அளவில் இருந்தன. ஆனால், அசோக் லேலாண்ட், ராயல் என்ஃபீல்ட், டி.வி.எஸ் மோட்டார்ஸ், மாருதி சுஸூகி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் ஏமாற்றம் தந்த விற்பனைப் போக்கே டிசம்பரிலும்  தொடர்ந்திருக்கிறது. முதலில் இருசக்கர வாகனங்கள் பற்றி பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick