கம்பெனி டிராக்கிங்: சுப்ரஜித் இன்ஜினீயரிங் லிமிெடட்! (NSE SYMBOL: SUPRAJIT)

மெக்கானிக்கல் கன்ட்ரோல் கேபிள்கள் உற்பத்தியில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நிறுவனம் சுப்ரஜித் இன்ஜினீயரிங் லிமிெடட். 1985-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுப்ரஜித் குழுமத்தைச் சார்ந்த நிறுவனம் இது. இந்தக் குழுமத்தின்கீழ் சுப்ரஜித் ஆட்டோமேட்டிவ் லிமிடெட் நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. உலக அளவில் வாகனங் களுக்கான ஹாலோஜன் பல்புகள் உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது  சுப்ரஜித் நிறுவனம்.

   நிறுவனத்தின் தொழில்
 
சுப்ரஜித் நிறுவனம் 1987-ம் ஆண்டில் வாகனங்களுக்குத் தேவையான உயர்தரம் வாய்ந்த லைனர் கேபிள்களை ஜப்பானிய நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தரத்தில் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.  இன்று வாகனங்களுக் கான மற்றும் வாகனங்களுக்கு அல்லாத கேபிள்கள் உற்பத்தியில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கிவருகிறது. உலக அளவில் இருக்கும் மெக்கானிக்கல் கேபிள் உற்பத்தி நிறுவனங்களில் முக்கிய ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக சுப்ரஜித் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick