சூப்பர் பவர் மேனேஜர்களை உருவாக்கும் இந்தியா!

வாசு கார்த்தி

ஜய் பங்கா, விக்ரம் பண்டிட், இந்திரா நூயி, சஞ்சய் ஜா, நிதின் நொஹோரியா, தீபக் ஜெயின், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, சாந்தனு நாராயண், பத்மஸ்ரீ வாரியர் உள்ளிட்ட அனைவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி களாக இருப்பதுதான். எஸ் அண்டு பி 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளில் அமெரிக்கர்களை அடுத்து, அதிகமாக இருப்பது  இந்தியர்கள்தான். இதற்குக் காரணம் இவர்கள் இந்தியாவில் வளர்ந்த சூழல் மற்றும் குடும்பங்களின் அமைப்புதான் எனக் கூறுகிறது ‘தி மேட் இன் இந்தியா மேனேஜர் (The Made in India Manager)’ என்னும் புத்தகம்.

டாடா சன்ஸ் இயக்குநர் குழு உறுப்பினரான ஆர்.கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் & ரிசர்ச்-ன் டீன் ரஞ்சன் பானர்ஜி ஆகிய இருவரும் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கின்றனர். இந்தப் புத்தகத்தின் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்தப் புத்தகம் குறித்து புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவரும் கூறியதன் சுருக்கம் இனி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick