கோவை சால்சர் எலெக்ட்ரானிக்ஸ்.. மூன்று முறை ஐ.பி.ஓ... வெற்றியின் ரகசியம்!

கோவையிலிருந்து பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங் களில் ஸ்பெஷலானது, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள சால்சர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம். காரணம், இந்த நிறுவனத்தின் சேர்மன் துரைசாமி மூன்று நிறுவனங்களை வெற்றிகரமாக ஐ.பி.ஓ வெளியிட்டு சாதனை படைத்திருக் கிறார். ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட இன்னும்கூட பல நிறுவனங்கள் யோசித்து வரும் நிலையில், துரைசாமி மட்டும் எப்படி மூன்று முறை ஐ.பி.ஓ வந்தார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்தோம்.

சுவிட்சர்லாந்துக்கு அனுப்பிய எல்.எம்.டபிள்யூ

‘‘எனது தந்தையார் கே.அரங்கசாமி நாயுடு மக்களுக்கும் கோயில்களுக்கும் பலவிதமான சேவைகளைச் செய்தவர். 1962-ம் ஆண்டு பெண்களுக்காக உயர்நிலைப் பள்ளி ஒன்றையும் அவர் தொடங்கினார். நான் பி.எஸ்.ஜி கல்லூரியில் 1965-ம் ஆண்டு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். படித்து முடித்தவுடன் எல்.எம்.டபிள்யூ (LMW) நிறுவனத்தில் ரூ.500 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

எல்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் நிறுவனரான தேவராஜூலு, பொருள்களைத் தரமாக உற்பத்தி செய்வதில் மிகவும் கவனமாக இருந்தார். நாம் தரமாகப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டுமெனில், எல்.எம்.டபிள்யூ நிறுவன ஊழியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினார். அதன்படி, வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டவர்களில் நானும் ஒருவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick