பொதுத் தேர்தல் 2019... எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் சந்தை என்ன ஆகும்? - ‘ஈக்வினாமிக்ஸ்’ ஜி.சொக்கலிங்கம் சிறப்புப் பேட்டி

‘சென்ட்ரம்’ நிறுவனத்திலிருந்து விலகியபின், ‘ஈக்வினாமிக்ஸ்’ என்கிற பங்கு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஜி.சொக்கலிங்கம், இப்போது  போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸ் எனப்படும்         பி.எம்.எஸ் சர்வீஸைத் தொடங்கியிருக்கிறார். அவர் அளிக்கும் பி.எம்.எஸ் சேவையை முதலீட்டாளர்களிடம் அறிமுகப்படுத்த சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் நமக்குச் சிறப்புப் பேட்டி ஒன்றையும் அளித்தார். அந்தப் பேட்டி இனி...

போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸை இப்போது தொடங்க என்ன காரணம்?

‘‘பங்குகளை ஆராய்ந்து பரிந்துரைக்கும் அட்வைஸரி மாடலில் முதலீட்டாளர்களுடன் நாங்கள் செலவழிக்கும் நேரம் மிக அதிகம். என்னைச் சந்திக்கும் பலர், அவர்கள் வாங்கியிருக்கும் பங்கு சரியானதா என்று கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளை நான் ஆராய்ந்துதான் பதில் சொல்ல வேண்டும்.   அதன் விளைவாகவே இந்த போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸைத் தொடங்கி யிருக்கிறேன்.
 
தவிர, அட்வைஸரி மாடலை ஓர் அளவுக்கு மேல் வளர்க்க முடியவில்லை. ஆனால், பி.எம்.எஸ் மாடலில் நன்கு வளர்ச்சி அடைய முடியும். இதையெல்லாம் மனதில்கொண்டு, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீஸைத் தொடங்கும் அனுமதியை செபியிடம் கேட்டோம். அந்த அனுமதி கிடைத்தவுடன், முதன்முதலாக தமிழகத்தில் இந்த சர்வீஸைத் தொடங்கி இருக்கிறேன்.’’

பொதுத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் சந்தை என்ன ஆகும்?

‘‘இதுதான் உள்ளபடியே பயப்பட வேண்டிய சூழ்நிலை. தலா சுமார் 180 சீட் மட்டுமே கிடைக்கும்பட்சத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டியிருக்கும். அப்போது கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கை களை நிறைவேற்றுவதற்கே நேரம் சரியாக இருக்குமே, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த முடியாது. இந்தச் சூழல் ஏற்படாமல் தடுக்க எந்தக் கட்சியாக இருந்தாலும், மெஜாரிட்டி யுடன் அரசாங்கம் வரவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick