ஷேர்லக்: ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்... உஷார்!

வசர வேலையாக மும்பை வந்துவிட்டேன். கேள்வி களை அனுப்புங்கள்” என ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப, நாம் உடனே கேள்விகளை மெயில் அனுப்பி வைத்தோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பினார் அவர்.

டிசம்பர் காலாண்டு முடிவுகள் பற்றி...?

“டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 24% அதிகரித்து உள்ளது. இது, அனலிஸ்ட்களின் எதிர்பார்ப்பைவிட குறைவாகும். இதனையடுத்து பங்கின் விலை இறங்கி வர்த்தகமாகிறது. 

தனியார் வங்கியான பந்தன் பேங்கின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 10.3% அதிகரித்து 331.26 கோடியாக உள்ளது.  ஐ.எல் & எஃப்.எஸ் பிரச்னைக்காக ரூ.385 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையிலும் இந்த வங்கி லாபம் ஈட்டியிருக்கிறது. காலாண்டு நிதி நிலை முடிவு வெளியான வியாழக்கிழமையன்று பங்கின் விலை 3.82% ஏற்றம் கண்டது. ஆனால், வெள்ளிக்கிழமை பங்கின் விலை சுமார் 2.5% இறங்கியது.  

இண்டஸ்இண்ட் வங்கியின் டிசம்பர் மாத காலாண்டு முடிவு எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளது.  வங்கியின் நிகர லாபம், 5% அதிகரித்து ரூ.985 கோடியாக உள்ளது. டிரேடிங் மற்றும்  கட்டண வருமானத்தால் நல்ல முடிவுகளை எட்டியுள்ளது. எனினும் ஐ.எல் & எஃஃப்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கிய கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகையால் (ரூ.255 கோடி)  இழப்பு சற்று கூடியுள்ளது. சிறு கடன்களின் தேவைப்பாடு வலுவாக இருப்பதால் நடப்பு காலாண்டிலும் கடன் வழங்கல் மற்றும் லாபம் அதிகரிக்குமென்று வங்கி கூறியுள்ளது.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick