கம்பெனி டிராக்கிங்: ஜென்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ZENSARTECH) | Company tracking: ZENSARTECH - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கம்பெனி டிராக்கிங்: ஜென்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட்! (NSE SYMBOL: ZENSARTECH)

ந்த வாரம் நாம் டிராக்கிங்கிற்கு எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 1979-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது ரூ.18,000 கோடி வர்த்தக அளவில் செயல்பட்டுவரும் ஆர்.பி.ஜி குழுமத்தின்  ஓர் அங்கமான ஜென்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட்.

வழங்கும் சேவைகள்

ஜென்சார் டெக்னாலஜி நிறுவனம் கணினி ரீதியிலான தீர்வுகளாக டிஜிட்டல் சப்ளை செயின், பெரு நிறுவனங்களுக்கான அனலிடிக்ஸ், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், நவீன திறன்கொண்ட கணினி ரீதியிலான நவீனமயமாக்கல், நிறுவன ரீதியான முழுமையான டிஜிட்டல் மயமாதலுக்கு உதவுதல் போன்றவற்றிற்கான தீர்வுகளை வழங்கிவருகிறது. சேவைகள் பிரிவில் அனலிடிக்ஸ், கிளவுட் மற்றும் இன்ஃப்ராஸ்ரக்சர், டிஜிட்டல் எக்ஸ்பீரி யன்ஸ், என்டர்ப்ரைஸ் அப்ளிகேஷன்ஸ், பரிசோதனை, டிஜிட்டல் வணிகத்தை மேம்படுத்தும் அனலிடிக்ஸ், டேட்டா வேர்ஹவுஸிங்,  பிக்டேட்டா மற்றும்   டேட்டா மேனேஜ்மென்ட் போன்ற சேவைகளை வழங்கிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick