தங்கம் (மினி)
தங்கம், ஒரு தொடர் ஏற்றத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது. அதாவது, தங்கம் கடந்த 2018 நவம்பரில் குறைந்தபட்ச புள்ளியாக 30155-ல் இருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்தது. அதன்பின் இந்த ஏற்றமானது டிசம்பர் 2018-ன் முதல் வாரம் வரை தொடர்ந்து, உச்சமாக 31966-ஐ தொட்டது.
இதுதான் தங்கத்தின் தற்போதைய ஏற்றத்தின் முன்னோடி. எப்போதுமே ஓர் ஏற்றம் என்பது ஒரே நேர்கோட்டில் ஏறுவது போல் நிகழாது. ஒவ்வொரு ஏற்றத்திற்கும், அதற்குண்டான ஓர் இறக்கமும் இருக்கும். அதுபோலவே, தங்கம் 31966-ஐ என்ற புள்ளியைத் தொட்டபிறகு படிப்படியாக இறங்கி 30914-ஐ என்ற புள்ளியைத் தொட்டது.