மாமனார் வீடு கட்ட நான் வீட்டுக் கடன் வாங்க முடியுமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

மாமனார் வீடு கட்ட நான் வீட்டுக் கடன் வாங்க முடியுமா?

கேள்வி - பதில்

எனது மாமனாருக்குச் சொந்தமாக வீட்டுமனை உள்ளது. அதில் வீடு கட்டும் அளவிற்கு வசதி இல்லை. என் மனைவி அவருக்கு ஒரே மகள். நான் தனியார் நிறுவனத்தில் நல்ல வருமானத்தில் பணியாற்றுகிறேன். என் மாமனார் வீடு கட்டுவதற்கு நான் வீட்டுக் கடன் வாங்கித்தர முடியுமா?

நாகராஜன், திண்டிவனம்

ஆர்.செல்வமணி, கனராவங்கி உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு)

“வீட்டு அடமானத்திற்குச் சிக்கல் வராதபடி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீங்கள் உங்களுடைய மாமனாருடன் இணைந்து வங்கிக் கடன் பெறலாம். மாமனாரின் ஒரே மகள் என்பதால் அவரது இடத்தை உங்கள் பெயருக்கோ, அல்லது அவரது மகளின் பெயருக்கோ மாற்றிக் கொடுத்த பிறகு அந்த வீட்டுமனையில் வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கலாம். அல்லது அந்த வீட்டுமனையை உங்களது மாமனார் மற்றும் மாமியாரின் காலத்திற்குப் பிறகு உங்களுக்கே உரிமை வரும்விதமாக செட்டில்மென்ட் எழுதித்தந்து, அதன்மூலமும் நீங்கள் வீட்டுக் கடன் பெறலாம். நீங்கள் கட்டும் வீட்டை அடமானம் செய்வதற்கு வங்கிக்கு எந்த விதத்திலும் சிக்கல் வரக்கூடாது என்பதே இதில் முக்கியமாகும். அடமானம் பண்ணித்தரும்போது மாமனார் மற்றும் மாமியார்  இணைந்து கையெழுத்துப் போட்டுத்தர வேண்டியதிருக்கும்.”