ஜி.எஸ்.டி வரி மாற்றம்... சிறுதொழில் நிறுவனங்களுக்கு நன்மை தருமா? | Will GST change be good to small scale industries? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

ஜி.எஸ்.டி வரி மாற்றம்... சிறுதொழில் நிறுவனங்களுக்கு நன்மை தருமா?

மீபத்தில் நடந்து முடிந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி கட்டுவதற்கான வரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த மாற்றம் எம்.எஸ்.எம்.இ துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாற்றம் குறித்து கொடீசியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இளங்கோவனிடம் கேட்டோம்.

“எம்.எஸ்.எம்.இ. தொழிலில் ஈடுபடு பவர்கள் ஜி.எஸ்.டி. கட்டுவதற்கான டர்ன் ஓவர் வரம்பை ரூ.40 லட்சமாக உயர்த்தி யிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், சேவைக்கான வரம்பை எந்த மாற்றமும் செய்யாமல், ரூ.20 லட்சம் என்கிற அளவிலேயே வைத்திருக் கிறார்கள். இதையும் உயர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.