சச்சின் சிக்கா, வணிகத் தலைவர் (சில்லறை & பெருநிறுவனப் பொறுப்புகள்), பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்
நம் சேமிப்பைப் பெருக்குவதற்காக முதலீடு செய்யும்போது அந்த முதலீடு சிறந்த முறையில் அமைவது முக்கியம். நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள் எனப் பல்வேறு முதலீட்டு முறைகள் உள்ளன. எனினும், இவற்றில் பெரும்பாலானவை பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் உள்ளிட்ட ரிஸ்க்கை உள்ளடக்கிய வையாக உள்ளன.
உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ஒட்டுமொத்த ரிஸ்க்கைக் குறைக்க ஒரே வழி, பல்வேறு முதலீட்டு வழிகளிலும் உங்கள் பணத்தை முதலீடு செய்வதாகும். ரிஸ்க்கைக் குறைத்து முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பேலன்ஸ் செய்ய விரும்பினால், உங்கள் முதலீட்டின் ஒருபகுதியை ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். இதில் வருமானம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப் படுவதினால், நிலையான வருமானத்தைப் பெற முடியும். ஒருவரின் நிதிநிலையை ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் எப்படி உயர்த்துகின்றன என்பதைப் பார்க்கலாம்.