வாங்க பழகலாம்! | Nanayam Book intro - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

வாங்க பழகலாம்!

நாணயம் புக் செல்ஃப்

லருடன் பழகி வைத்திருந்தால், அந்தப் பழக்கம் சரியான நேரத்தில் கைகொடுக்கும் என்பார்கள்.  பிறருடன் எப்படிப் பழக்கவழக்கத்தை அமைத்துக்கொள்வது என நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. கரன் விக்ரே எனும் பெண்மணி எழுதிய புத்தகம் அவர்களுக்கு உதவக்கூடும். வெளியுலகத்தை விட்டு விலகி இருக்கும் (Introvert) நபர் களுக்கான புத்தகம் இது. நெட்வொர்க்கிங் செய்து அதை உதவிகரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் நாம் இருக்கும் துறையில் செயல்படும் மனிதர்களுடன் தொடர்பில் இருப்பதை விரும்புவதில்லை. எப்போதாவது நமக்குத் தேவைகள் ஏற்படும்போது மட்டுமே (உதாரணத்திற்கு நாம் வேலை மாற நினைக்கும்போது, பணியிடம் குறித்த வழிகாட்டுதல் நமக்குத்  தேவைப்படும்போது) நெட்வொர்க்கிங்கின் அவசியத்தை நாம் உணருகிறோம்.