ஷேர்லக்: எல்.ஐ.சி. வாங்கி, விற்ற பங்குகள்..! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

ஷேர்லக்: எல்.ஐ.சி. வாங்கி, விற்ற பங்குகள்..!

ஓவியம்: அரஸ்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்துடன் இன்று மாலை செல்ல வேண்டியிருக்கிறது. கேள்விகளை வாட்ஸ்அப்-ல் அனுப்பவும் என ஷேர்லக் நமக்குச் செய்தி அனுப்பி இருந்தார். நாம் அனுப்பி வைத்த கேள்விகளுக்கு மாலை 6 மணிக்குப் பதில் அனுப்பியிருந்தார். 

கடனைத் திரும்பச் செலுத்தாத எஸ்ஸார் ஸ்டீல் சொத்துகளை விற்பதில் எஸ்.பி.ஐ வங்கி தீவிரம் காட்டியுள்ளதே?

‘‘எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்குக் கொடுத்த மொத்தக் கடனான ரூ.15,431 கோடியையும், அதன் சொத்துகளை விற்று மீட்பதில் எஸ்.பி.ஐ வங்கி தீவிரமாக உள்ளது. இதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட அந்த நிறுவனச் சொத்துகளின்  குறைந்தபட்ச விற்பனை விலையையும் அது நிர்ணயித்து உள்ளது. கடனை விரைவாக மீட்கவேண்டும் என்பதற்காக, சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை அதாவது, ரூ.9,588 கோடியை, குறைந்தபட்ச விற்பனை விலையாக நிர்ணயித்துள்ளது.

மேலும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளில் சுமார் 70 சதவிகித வழக்குகள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்க்கப்படு வதில்லை என்பதால், கிடைத்தவரை லாபம் என்கிற கணக்கில் இந்தக் குறைந்தபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.’’

ஜீ என்டர்டெய்ன்மென்ட்  பங்கு மீது புரோக்கரேஜ் நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளனவே?

‘‘2018 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம், எதிர்பார்த்ததைவிட அதிக வருவாயை ஈட்டியுள்ளது. அதாவது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 50.26% அதிகமாக, ரூ.562.38 கோடியை ஈட்டியுள்ளது. இதனால் புரோக்கரேஜ் நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளன. இந்த நிலையில், காலாண்டு முடிவுகளின் எதிரொலியாக இந்த நிறுவனத்தின் பங்கு விலை, புதன்கிழமையன்று  வர்த்தகத்தின் இடையே 4% உயர்ந்தது.

இதனிடையே தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ, 2019 மற்றும் 2020-ம் நிதியாண்டுகளில் இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் 19% அளவுக்கு இருக்கும் என்று கணித்துள்ளதுடன்  அதன் பங்கு இலக்கு விலையையும் 670 ரூபாயாக நிர்ணயித்துள்ளது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க