என்.சி.டி முதலீடு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்! | 10 Things to Know about Non-Convertible Debentures - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

என்.சி.டி முதலீடு... கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்!

நாம் வங்கிகளில் அதிகம் வைப்புநிதி (Bank Fixed Deposits) வைத்துள்ளோம். அதேசமயம், அதைவிட அதிக வட்டி கிடைக்கும் முதலீட்டை  விரும்புகிறோம். வங்கிகளின் வைப்புநிதிக்கு மாற்றாக கடன் சார்ந்த   மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்தது என நிதி ஆலோசகர்கள் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும், அதிகம் பேர் அதன் பக்கம் போவது இல்லை. காரணம், மியூச்சுவல் ஃபண்டுகளில் லாப விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை. சில சமயங்களில் வங்கி எஃப்.டி வட்டியைவிட கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் லாபம் குறைவாக இருக்கிறது. தற்சமயம் இதுவே நிதர்சனமாக உள்ளது. இதுபோன்ற தருணங்களில் வங்கி வைப்பு நிதியைவிட அதிக வட்டி வேண்டும், அதுவும் சீராக வர வேண்டும், குறிப்பிட்ட வட்டி விகிதம் கிடைக்க வேண்டும் என்று பார்த்தால் இந்த எல்லா அம்சங்களும் பொருந்தி வரக்கூடிய முதலீடு, கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளாக மாறாத கடன் பத்திர (NCD - Non-convertible Debentures) முதலீடாக இருக்கிறது. இதில், கவனிக்க வேண்டிய பத்து முக்கிய அம்சங்களை இங்கு பார்ப்போம்.