பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி இண்டெக்ஸ்

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 10900 புள்ளிகளைக் கடந்து, ஒரு மூர்க்கத்தனமான நகர்வுக்குப்பின், மேற்கொண்டு பெரிய அளவில் முன்னேற முடியாமல் நிற்கிறது. சந்தையில் இந்த வாரத் தொடக்கம் பெரும்பாலான சந்தையாளர்களுக்கு முயற்சி செய்து பார்க்கும் தருணமாகவே இருந்தது.

இந்தியப் சந்தை, தனது தடைநிலை அல்லது ஆதரவு நிலையைத் தொடர்ந்து கடக்க, சில செய்திகளின் வரத்துக்காகவோ அல்லது சாதகமான நிகழ்வுகளுக்காகவோ காத்துக் கொண்டிருப்பதாகவே காணப்பட்டது. எனவே, இன்னும் காளை தனது பணியின் ஒரு பகுதியை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நிஃப்டியைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்ட பேங்க் நிஃப்டி, தொடர்ந்து தனது ஏற்ற நிலையைத் தக்கவைத்துக்கொண்டுள்ள போதிலும் கூட, முடிவடைந்த வாரத்தில் நிஃப்டி மீண்டுவருவதைப் போன்று காணப்பட்டது.