கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி)

தங்கம் 2019 ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குப் பிறகு ஏறும்போதெல்லாம் தடுமாறி இறங்கி வந்தது.  ஆனால், கீழே 31400 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு மேலே திரும்ப ஆரம்பித்தது. தங்கம் ஒரு வலுவான பாட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால், இனி ஒரு வலுவான ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம்.

சென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் ஜூன் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூலை மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம்.  தங்கம் வலிமையான இறக்கத்திற்குப் பிறகு 31420 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.

இதை உடைக்காதவரை, எல்லா இறக்கத்திலும் 31420-ஐ நஷ்டத் தடையாக வைத்து வாங்கி விற்கலாம். மேலே 31880 உடனடித் தடைநிலையாக உள்ளது. இந்தத் தடையைத் தாண்டினால் வலிமை யான ஏற்றம் வரலாம்.’’

தங்கம் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31420-ஐ தக்கவைத்துக்கொண்டது.  அடுத்து தடைநிலையான 31880 என்ற எல்லையில் தொடர்ந்து தடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. 

வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று 31880 என்ற தடை நிலையை உடைத்தது, அடுத்த கட்டமான ஏற்றத்திற்குத் தயாராகி 32150 என்ற எல்லையையும் தாண்டியது.

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் ஏறுமுகமாக மாறிய நிலையில்,  32300 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.  இதை உடைத்து ஏறினால் 32650 என்ற எல்லையை நோக்கி நகரலாம். கீழே முந்தைய தடைநிலையான 31880 தற்போது ஆதரவாக மாற வாயப்புள்ளது. இதை உடைத்தால் மிதமான இறக்கம் வரலாம்.