கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி | Commodity trading - Agri Commodity - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், மே மாதம் 2019-ன் ஆரம்பத்திலிருந்து மெள்ள மெள்ள ஏற ஆரம்பித்தது. டெக்னிக்கல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுப்பது போல், ஒரு ஹையர் டாப் மற்றும் ஹையர் பாட்டத்தைத் தோற்றுவித்து ஏற ஆரம்பித்துள்ளது.  தினசரி வரைபடத்தில் ஏறுமுகமாக இருந்தாலும் வார வரைபடத்தில் ஒரு புல்பேக் ரேலியாகவே தோன்றுகிறது.

சென்ற  வாரம் சொன்னது… “மென்தா ஆயில், மே மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.  மென்தா ஆயில் அப்டிரெண்டில் இருப்பதால், மேலே உடனடித் தடைநிலையான 1330-ஐ தாண்டினால் இன்னும் வலிமையான ஏற்றம் வரலாம். தற்போதைய உடனடி ஆதரவு எல்லை 1280 ஆகும்.”

மென்தா ஆயில் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1330-ஐ தக்கவைத்துக்கொண்டுள்ளது. சென்ற வாரம் திங்களன்று ஒரு கேப் டவுனில் இறங்கி, வாரத்தின் முதல் தினம் அன்றே வலிமை குன்ற ஆரம்பித்தது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1280-ஐ உடைத்து இறங்கி, 1267 வரை இறங்கியது. ஆனாலும், ஒரு நாள் மட்டுமே அந்த அளவிற்கு இறங்கியது. அதன்பின் சற்றே மீண்டு, வியாழனன்று மிகப் பலமான ஏற்றத்தைக் கொடுத்தது.  இந்த ஏற்றம் மென்தா ஆயில் உச்சமான 1309 என்ற எல்லையைத் தொட வைத்தது. இதனால் மென்தா ஆயில் மீண்டும் வலிமை பெற முயற்சி செய்துவருகிறது.  சென்ற வாரம் இறக்கத்தில் தொடங்கி மீண்டுள்ளது. ஆனாலும், இன்னும் ஏறச் சிரமப் பட்டது.

இனி என்ன செய்யலாம்?

மென்தா ஆயில் சென்ற வாரம் இறங்கி னாலும், தொடர்ந்து ஒரு ஹையர் பாட்டத்தைத்  தக்கவைத்துள்ளது. இதனால் 1270 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது. இதை நஷ்டத்தடையாக வைத்து எல்லா இறக்கத்திலும் வாங்கலாம். மேலே 1320 என்பது வலுவான தடைநிலையாக உள்ளது.