நிதி வாழ்க்கை சிறக்க கிரிக்கெட் சொல்லும் ஐந்து விஷயங்கள்! | Five Cricket facts for Good Financial Life - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

நிதி வாழ்க்கை சிறக்க கிரிக்கெட் சொல்லும் ஐந்து விஷயங்கள்!

லகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிவிட்டது. இந்தியா உள்பட பாகிஸ்தான், இங்கிலாந்து என மொத்தம் பத்து நாடுகள் களமிறங்கியுள்ளன. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும்கூட, மக்கள் விளையாட்டாக மாறியிருப்பது கிரிக்கெட்தான்.

கிரிக்கெட் விளையாட்டை எல்லோரும் விரும்ப காரணம், அதன் வெளிப்படைத் தன்மையே. விளையாட்டின் விதிமுறைகளும் அணுகுமுறையும் சரியாக இருப்பதால் தான், இந்த விளையாட்டை `ஜென்டில்மேன் விளையாட்டு’ என்று அழைக்கிறார்கள். மற்ற விளையாட்டுகளில்கூட விவாதங்கள் நடக்கும். ஆனால், அவுட் எனத் தெரிந்த அடுத்த நிமிடமே ஆடுகளத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்கிற கண்ணியமும் கட்டுப்பாடும் இருப்பது இந்த விளையாட்டில் மட்டும்தான். அதனால்தான் மற்ற விளையாட்டைக் காட்டிலும், கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.