பிட்ஸ் | Business Bit News - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

பிட்ஸ்

கிரிக்கெட்டைச் சுற்றிவரும் விளம்பரங்கள்!

2019
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டித் தொடரில் பல நூறு கோடிகளைச் செலவு செய்யத் தயாராக இருக்கின்றன தொழில் நிறுவனங்கள். நான்கு ஆண்டு களுக்குமுன் அதாவது 2015-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் 5 சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்தன. இந்தி, ஆங்கிலம், பெங்காளி, தமிழ், கன்னடம் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் ஏறக்குறைய 700 கோடி ரூபாய் விளம்பரம் வருமானம் கிடைத்தது. ஆனால், தற்போது நடக்கும் கிரிக்கெட் போட்டியை 15 சேனல்கள் ஒளிபரப்பப் போகின்றன. கடந்தமுறை ஒளிபரப்பான மொழிகளுடன் தெலுங்கு மொழியும் இந்தமுறை சேர்ந்திருக்கிறது. இந்த ஏழு மொழிகள் மூலம் சுமார் 1,800 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது!  #கரன்சிகளைக் கொட்டும் கிரிக்கெட்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க