பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!


இண்டெக்ஸ்

து ஒரு சுவாரஸ்யமான வாரம். வாரத் தொடக்கத்திலேயே இந்தியப் பங்குச் சந்தை நன்றாகச் செயல்பட்டது. முந்தைய வாரத்தில் நரேந்திர மோடியின் மிகப் பெரிய வெற்றிக்குப்பிறகான அதே உற்சாகம், இந்த வாரத்திலும் தொடர்ந்தது. பாதை தெளிவாகத் தெரிந்தபோதிலும் சந்தை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வணிகத்தில் ஈடுபட்டனர். எனவே, நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இண்டெக்ஸ்களின் ஏற்றம் கணிசமான அளவிலேயே இருந்தது.

கடந்த வெள்ளியன்று முந்தைய உச்சத்தைச் சந்தை எட்டமுனைந்தது. ஆனால், சில திடீர் இறக்கத்தால் அந்த நம்பிக்கை தளர்ந்தது. அந்த நாளின் அதிக இறக்கத்தால் சந்தையின் நிறைவு சீர்குலைந்தது. இதற்கு டிரேடர்களின் அதிக வர்த்தகம் காரணமாக அமைந்தது. 

ஆனால், நீண்ட கால  முதலீடு எவ்விதத் தடங்கலுமின்றி நீடித்தது.  இதன் மேல்நோக்கிய பயணத்தில் நிஃப்டி நல்லதொரு ஆதரவு  நிலை 11650-ல் உருவாகியிருக்கிறது.  இறங்கினால் 11000-க்கு வர வாய்ப்புள்ளது.

கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட இறக்கத்திற்கான காரணம்,  வெளிப்படையாகத்  தெரியவில்லை.  அப்படி வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  உள்நாடோ அல்லது வெளிநாடோ, காரணம் எதுவானாலும் இந்தியப் பங்குச் சந்தை பெரிய அளவில் சரிவடைய வாய்ப்பில்லை.  நான்காம் காலாண்டு நிதிநிலை  முடிவுகள் வெளிவருவது  முடிவுக்கு வரவுள்ளன. இதனால்  சந்தைக்குச் சாதகமான தூண்டுதல்கள் குறையக்கூடும்.