கம்பெனி டிராக்கிங்: வராக் இன்ஜினீயரிங் லிமிடெட்! - (NSE SYMBOL: VARROC) | Company Tracking: Varroc Engineering Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

கம்பெனி டிராக்கிங்: வராக் இன்ஜினீயரிங் லிமிடெட்! - (NSE SYMBOL: VARROC)

ந்த வாரம் நாம் டிராக்கிங் பகுதியில் ஆய்வு செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம், வராக் குழுமத்தின் ஓர் அங்கமான வராக் இன்ஜினீயரிங் லிமிடெட். இது வாகன உதிரிபாக உற்பத்தியில் குளோபல் டயர்-1 நிறுவனமாகத் திகழ்கிறது. 

   நிறுவனத்தின் வரலாறு


இந்த நிறுவனம் 1988-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்றைக்கு வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், வாகனங்களின் வெளிப்பகுதியில் பொருத்தப்படும் விளக்குகள் (முகப்பு விளக்குகள், பின்பக்க விளக்குகள்), பிளாஸ்டிக்/பாலிமர்களினாலான உதிரி பாகங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.

கார்கள், கமர்ஷியல் வாகனங்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், ஓ.ஹெச்.வி எனப்படும் ஆஃப் ஹைவே வாகனங்கள் போன்றவற்றிற்கான எலெக்ட்ரிக்கல் - எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பிரிசிஷன் மெட்டாலிக் உதிரிபாகங்களையும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்துவருகிறது. இதன்மூலம் உலக அளவில் செயல்படும் பல்வேறு வாகன உற்பத்தியாளர்களுக்கு சப்ளையும் செய்துவருகிறது. இந்த நிறுவனம் 2018-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது.

   நிறுவனத்தின் தொழில் பிரிவுகள்


இந்த நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், வாகனங்களுக்கான வெளிப்புற விளக்குகள் தயாரிப்பு மற்றும் 2/3/4 சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி என இருபெரும் தொழில் பிரிவுகளில் செயல்படுகிறது.
ஆரம்பக் காலத்தில் பாலிமர்கள் உற்பத்தியில் கவனம் செலுத்திய  இந்த நிறுவனம் 2005-ம் ஆண்டில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான கேட்டலிட்டிக் கன்வர்ட்டர்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

2007-ம் ஆண்டில் இத்தாலிய நிறுவனமான ஐ.எம்.இ.எஸ் எனும் ஃபோர்ஜிங் நிறுவனத்தைக் கையகப்படுத்திய இந்த நிறுவனம், 2011-ம் ஆண்டில் மற்றுமொரு  இத்தாலிய நிறுவனமான டி.ஆர்.ஐ.ஓ.எம் என்னும் இருசக்கர வாகனங்களுக்கான விளக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினையும் கையகப்படுத்தியது.