நாணயம் பிட்ஸ் | Nanayam bits - Nanayam Vikatan | நாணயம் விகடன்
இந்திய மருந்து நிறுவனங்கள் ஏமாற்றுகின்றனவா? - கிலி கிளப்பும் புதிய புத்தகம்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2019)

நாணயம் பிட்ஸ்

20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர்!

மி
ன்சார வாகன வணிகத்தில் ஈடுபடப் போவதாக சஹாரா குழுமம் அறிவித்துள்ளது. அது, மின்சாரத்தில் இயங்கக்கூடிய  ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், மூன்று சக்கர வாகனம், சரக்கு வாகனங்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன. சஹாரா இவால்ஸ் (Sahara Evols) என்கிற பிராண்டில் இந்த வாகனங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆரம்பத்தில் லக்னோ நகரில் அறிமுகமாகும் இந்த வாகனங்கள், அடுத்த நிதியாண்டில் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வருமாம்.  “பெட்ரோல் வாகனங்களில் ஒரு கிலோ மீட்டர் வரை பயணம் செய்வதற்கு ரூ.2 செலவாகிறது. ஆனால், மின்சார வாகனங்களில் வெறும் 20 பைசாதான் செலவாகும்” என்கிறார் சஹாரா சுப்ரதா ராய்.

# சிட் ஃபண்ட் மூலமா வசூல் செஞ்ச பணத்தை எப்ப குடுப்பீங்க ஜி?


அதிகரிக்கும் வங்கி மோசடிகள்!

ண்டுதோறும் வங்கி மோசடிகள் அதிகரித்து நம்மை அதிர வைத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த 2018-19-ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 6,800 வங்கிகள் மோசடிக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மோசடிமூலம் ஏமாற்றப்பட்ட தொகை ரூ.71,500 கோடி. கடந்த 2017-18-ம் ஆண்டில் 5,916 வங்கி மோசடிமூலம் ரூ.41,167 கோடி ஏமாற்றப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளில் ஏறக்குறைய 53,334 மோசடிகள் மூலம் ரூ.2.05 லட்சம் கோடி ஏமாற்றப்பட்டிருக்கிறது. ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் சி.சிவசங்கரன், ஐ.டி.பி.ஐ வங்கியின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வாக இருந்த கிஷோர் காரத், ஐ.டி.பி.ஐ வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த எம்.எஸ்.ராகவன் உள்படப் பலரும் இந்த மோசடிக் குற்றத்தில் சிக்கியிருக்கின்றனர்.

#வேலியையே மேய்ந்த கறுப்பாடுகள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க