ஹெல்த் இன்ஷூரன்ஸ்... காத்திருக்கும் புதிய மாற்றங்கள்! | IRDAI proposes new guidelines for life insurance policies - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... காத்திருக்கும் புதிய மாற்றங்கள்!

ந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), பொதுவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விதிமுறை களைக்கொண்ட ஸ்டாண்டர்டு மெடிக்ளெய்ம் பாலிசியை விரைவில் கொண்டுவரவுள்ளது. அதுகுறித்த வரைவு அறிக்கை ஒன்றை, ஐ.ஆர்.டி.ஏ.ஐ அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் இனி... 

* மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கட்டாயம் இருக்கவேண்டிய அடிப்படையான கவரேஜ் மட்டுமே இனி இருக்கும். கூடுதலான மற்றும் ஆட்-ஆன் கவரேஜ் எதையும் சேர்க்கக்கூடாது.

* ஸ்டாண்டர்டு மெடிக்ளெய்ம் பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத்தொகை ரூ.50,000-ஆகவும், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் இருக்கும்.

* மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசியை 18 - 65 வயதுடையவர்கள், வாழ்நாள் முழுவதுக்கும் புதுப்பித்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு, பிறந்தது முதல் 25 வயது வரை இன்ஷூரன்ஸ் கவரேஜ் உண்டு.

* `மருத்துவக் காப்பீடு ஒழுங்குமுறை 2016’ விதிமுறைகளின்படி, வெவ்வேறுவிதமான மருத்துவக் காப்பீட்டுக் கவரேஜைப் பொறுத்து, காப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனமே நிர்ணயம் செய்துகொள்ளலாம். அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட காலத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சை, கண்பொறை நோய்க்கான சிகிச்சை, காயத்தின் காரணமாக எடுத்துக்கொள்ளும் பல் சிகிச்சை, நோய் அல்லது காயம் காரணமாகச் செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வியாதிகளுக்கான சிகிச்சை செலவுகளுக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸில் க்ளெய்ம்  உண்டு.

[X] Close

[X] Close