பி.பி.எஃப் கணக்கு... வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

பி.பி.எஃப் கணக்கு... வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா?

கேள்வி - பதில்

பி.பி.எஃப் கணக்கை ஒரு வங்கியிலிருந்து வேறு வங்கிக்கு மாற்ற முடியுமா, அதற்கு என்ன வழிமுறை?

பிரபாகரன், புதுக்கோட்டை

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்

“பி.பி.எஃப்  கணக்கை  ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கோ, அஞ்சலகத்திற்கோ மாற்றலாம். அப்படி மாற்றும்போது, எந்த வங்கிக் கிளைக்கு மாற்ற விரும்புகிறோம், அதன் முகவரி போன்ற விவரங்களைத் துல்லியமாகக் கொடுக்க வேண்டும். அதன்பின், உங்களுடைய கணக்கின் சான்றிதழ் நகல், கணக்குத் தொடங்கப்பட்ட படிவம், வாரிசு (நாமினேசன்) படிவம், மாதிரி கையெழுத்துப் படிவம், கணக்கிலிருக்கும் தொகைக்கான காசோலை மற்றும் பாஸ்புக் ஆகியவற்றைப் புதிய வங்கியின் வசம் பழைய வங்கி ஒப்படைக்கும். அதன்பின் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட தகவல் புதிய வங்கியிட மிருந்து உங்களுக்கு வரும். அப்போது உங்களுடைய புகைப்படம், பான் கார்டு, இருப்பிடச் சான்று போன்றவற்றை புதிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். உங்களுடைய பழைய பி.பி.எஃப் கணக்கின் தொடர்ச்சி புதிய வங்கியில் தொடரும். இதற்காகப் புதிய கணக்கு எதுவும் திறக்கப்படாது.”

[X] Close

[X] Close