நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

நாணயம் QUIZ

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்வி களையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.  வருமான வரி விதிப்பில் இந்தியாவில் இப்போது ஆண் - பெண் வேறுபாடு இல்லை.

அ.  சரி
ஆ. தவறு

2. ஐந்தாண்டு வரிச் சேமிப்பு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை அதன் முதிர்வுக்குப் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலும் நீடித்துக்கொள்ள முடியும்.

அ. தவறு
ஆ. சரி 

3. செல்வ மகள் சேமிப்புக் கணக்கில் (Sukanya Samriddhi Yojana Account) சேர அடிப்படைத் தகுதி

அ. கணக்குத் தொடங்கும்போது 10 வயதுக்குள் இருக்க வேண்டும்
ஆ. கணக்குத் தொடங்கும்போது 12 வயதுக்குள் இருக்க வேண்டும்
இ. கணக்குத் தொடங்கும்போது 15 வயதுக்குள் இருக்க வேண்டும்

4. உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது?

அ. 5
ஆ. 6
ஆ. 7

5. செபி அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு

அ. 1990
ஆ. 1992
இ. 2000 

6. இந்தியாவில் விவசாயக் கடன் யாரால் ஒழுங்குப் படுத்தப்படுகிறது?

அ. ஆர்.பி.ஐ
ஆ. நபார்ட்
இ. மத்திய அரசு

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close