குடும்பத்தினர்... வாரிசுதாரர்... நியமனதாரர்... நம் பணத்துக்குப் பயனாளி யார்? | Who is the beneficiary of our money? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

குடும்பத்தினர்... வாரிசுதாரர்... நியமனதாரர்... நம் பணத்துக்குப் பயனாளி யார்?

மது பணத்துக்கு யாரெல்லாம் பயனாளிகள், நமக்குப்பின் நம்முடைய பணத்தை யாரெல்லாம் சொந்தம் கொண்டாட முடியும் என்கிற சிந்தனை நாம் வாழும் காலத்தில் நம்மில் பலருக்கும் எழுவதே இல்லை. ஆனால், இன்றைக்கு நடக்கும் பல குடும்பத் தகராறுகளுக்குக் காரணம், குடும்பத் தலைவரின் மறைவுக்குப்பிறகு யார் அந்தப் பணத்தைச் சொந்தம் கொண்டாடுவது என்பதுதான் பெரும் பிரச்னையாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், இந்தப் பிரச்னை இனி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதை நமக்கு எச்சரிக்கிற மாதிரிதான் இருக்கிறது.

அதாவது, பிரசவக் காலத்தில் இருந்தார் மனைவி. மனைவியின் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்கப் போனார் அவரது கணவர். கார்டை உள்வாங்கிக்கொண்ட பணம் தரும் எந்திரம், பணத்தைத் தரவில்லை. ஆனால், பணம் தரப்பட்டwதாக சேமிப்புக் கணக்கில் தொகையைக் கழித்துவிட்டது அந்த எந்திரம். பணத்தைத் தராமலே கணக்கில் மட்டும் கழித்துக் கொண்டதால்,   வங்கியிடம் அவர் புகார் செய்தார். வங்கியானது அவரது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close