வருமான வரி... தவிர்க்கும் அமேசான்! | Amazon Didn't Pay Any Federal Income Taxes - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

வருமான வரி... தவிர்க்கும் அமேசான்!

வாசு கார்த்தி

மேசான் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காரணம், அமேசான் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வரி ஏதும் செலுத்தாமல் இருப்பதுதான்.

இந்தியத் தொழிலதிபர்கள்  மட்டுமல்ல, அமெரிக்கத் தொழிலதிபர்களுக்கும் வரி என்பது பிடிக்காதுபோல. சந்தை மதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாவது இடம்பிடித்த நிறுவனம் 1,120 கோடி டாலருக்கு மேல் லாபம் ஈட்டும் நிறுவனம் என்னும் அடையாளம் இருந்தாலும், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமேசான் வரி ஏதும் செலுத்தவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு 560 கோடி டாலர் அளவுக்கு லாபம் ஈட்டியது அமேசான் நிறுவனம். அப்போதும் வரி எதையும் செலுத்த வில்லை. 2018-ம் ஆண்டு லாபம் இரு மடங்காக உயர்ந்த போதும், அமேசான் வரி எதுவும் செலுத்தவில்லை.

அமெரிக்க சட்டத்தின்படி 21% அளவுக்கு வரிச் செலுத்த வேண்டும். ஆனால், பல சலுகைகள், கொடைகள் மூலம் பல கோடி டாலர் அளவுக்கு அமேசான் நிறுவனம் வரிச் செலுத்து வதிலிருந்து தள்ளுபடி பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு வரிச் செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்றது மட்டுமல்லாமல், மேலும் 140 கோடி டாலர் அளவுக்கு வருங்காலத்தில் வரிச் செலுத்த தேவை இல்லை என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close