கடைசி நேர வரிச் சேமிப்பு... பதற்றம்... சிக்கல்... உஷார்! | Last-minute Tax-Saving Investments: Alerts - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

கடைசி நேர வரிச் சேமிப்பு... பதற்றம்... சிக்கல்... உஷார்!

ம்மில் பெரும்பாலோர் வருமான வரியைச் சேமிப்பதற்கான முதலீட்டை பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் யோசிக்க ஆரம்பிக்கிறோம். கடைசி நேரத்தில் செய்யப்படும் முதலீடுகளில் பல தவறாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

பொதுவாக, பிராவிடென்ட் ஃபண்ட், பிள்ளைகளின் கல்விக் கட்டணம், ஆயுள் காப்பீடு பாலிசி, வீட்டு வாடகை போன்ற வரிச் சேமிப்பு விஷயங்கள் பலருக்கும் இருக்கும். இந்த நிலையில், வருமான வரி கட்டுவதைத் தவிர்க்க அவசர அவசரமாக ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, அடுத்துவரும் ஆண்டுகளில் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்.

ஆயுள் காப்பீடு பாலிசிகள்

கடைசி நேரத்தில் வருமான வரியை மிச்சப்படுத்தக் கொடுப்பதற்கென்றே சில லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் பலமுறை இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லியும் கேட்காத பலரும், மார்ச் மாதம் தேடிவந்து இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவார்கள். 

பல ஏஜென்ட்டுகள், நீங்கள் அதிகத் தொகையை வரிச் சேமிக்க முதலீடு செய்யவேண்டும் என்பதால், டேர்ம் பிளான் எடுப்பதால், எந்தப் பயனும் இல்லை; எண்டோவ்மென்ட் பாலிசி அல்லது யூலிப் பாலிசி எடுத்தால்தான் நீங்கள் கட்டிய பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் என்பார்கள். 

ரூ.1 லட்சம் பிரீமியம் கட்டினால், ரூ.30,000 வரி மிச்சமாகும் என எண்டோவ்மென்ட் அல்லது யூலிப் பாலிசியை பரிந்துரை செய்வார்கள் அதை விற்கும் ஏஜென்ட்டுகள். இந்த பாலிசிகளில் அடுத்துவரும் ஆண்டுகளிலும் இதே அளவுக்கு பிரீமியத்தைக் கட்ட வேண்டும் என்கிற விவரம் தெரியாமலே பலரும் இந்த பாலிசியை எடுத்துவிடுகிறார்கள். அடுத்துவரும் ஆண்டுகளில், பிரீமியம் கட்டச் சொல்லி நோட்டீஸ் வரும்போதுதான், ‘அடடா தவறு செய்துவிட்டோமே’ என்று தவிக்கத் தொடங்குகிறார்கள்!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close