பி.எஃப் வட்டி உயர்வு... லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி? | EPF interest rate hiked: how to use it profitable - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

பி.எஃப் வட்டி உயர்வு... லாபகரமாகப் பயன்படுத்துவது எப்படி?

ம்பளக்காரர்களுக்கு சந்தோஷ செய்தியை அண்மையில் பணியாளர் சேமநல நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) அறிவித்திருக்கிறது. அதாவது, பிராவிடென்ட் ஃபண்ட் (பி.எஃப்) முதலீட்டுக்கான வட்டி விகிதம், நடப்பு 2018-19- ம் ஆண்டுக்கு 8.55 சதவிகிதத்திலிருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பி.எஃப் வட்டி உயர்த்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017-18-ம் ஆண்டு பி.எஃப் கணக்கில் சுமார் ரூ.1.31 லட்சம் கோடி டெபாசிட் ஆகியிருக்கிறது. 2018-19-ம் ஆண்டில் இது சுமார் ரூ.1.46 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

பணியாளர் சம்பளத்தில் (அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி) 12% பி.எஃப்-ஆகப் பிடிக்கப் படுகிறது. இதே அளவு பணத்தை நிறுவனமும் உறுப்பினர் கணக்கில் செலுத்துகிறது. இதுதவிர, பணியாளர் விருப்ப பி.எஃப் (வி.பி.எஃப்) மூலம் அவரின் சம்பளத்தில் 88% வரை சேமிக்க முடியும். இந்த முதலீட்டுக்கும் 80சி பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close