ஆர்.இ.சி - பி.எஃப்.சி இணைப்பு... யாருக்கு லாபம்? | REC-PFC Merger: Who benefits out of it? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

ஆர்.இ.சி - பி.எஃப்.சி இணைப்பு... யாருக்கு லாபம்?

மின்துறை சார்ந்த இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்களான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பி.எஃப்.சி) நிறுவனமும், ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) நிறுவனமும் இணையவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது,  பி.எஃப்.சி நிறுவனமானது, ஆர்.இ.சி நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறது. அதன் பிறகு, பி.எஃப்.சி நிறுவனம் தொடர்ந்து மத்திய பொதுத்துறை நிறுவனமாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இணைப்பானது, வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடியும் என்று கூறப்பட்டுள்ளது. செபி, ரிசர்வ் வங்கி மற்றும் காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா அமைப்புகளிட மிருந்து இந்த இணைப்புக்கான ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.

இந்த இணைப்புக் குறித்து அறிவிப்பு வந்தாலும்கூட இந்த இணைப்புக்கான பரிமாற்றத்தொகை குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த இணைப்பு விவகாரங்களுக்காக, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறையின் சார்பில் மதிப்பீட்டாளரை நியமித்து, ஆர்.இ.சி மற்றும் பி.எஃப்.சி நிறுவனங்களின் மொத்த மதிப்பு, தனித்தனியாக அளவிடப்படும். அந்த மதிப்பீடு வந்தபிறகு இணைப்புக்கான பரிமாற்றத்தொகை முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

விநியோகம் மற்றும் பரிமாற்றத்தில் ஆர்.இ.சி நிறுவனத்தின் பரந்துபட்ட நிபுணத்துவம், பி.எஃப்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கக்கூடும். அதேபோல, மின் உற்பத்திக்கான பி.எஃப்.சி நிறுவனத்தின் நிபுணத்துவம், ஆர்.இ.சி நிறுவனத்துக்குப் பயனளிக்கக்கூடும். எனவே, ஒத்திசைவான செயல்பாட்டின்மூலம் இரண்டு  நிறுவனங்களுமே பயனடையக்கூடும்.

[X] Close

[X] Close