பணம் தராவிட்டால் ஜெயில்... அனில் அம்பானிக்கு எச்சரிக்கை! | Ericsson case: Anil Ambani held guilty of contempt of court - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

பணம் தராவிட்டால் ஜெயில்... அனில் அம்பானிக்கு எச்சரிக்கை!

‘எரிக்ஸன் நிறுவனத்துக்குத் தரவேண்டிய ரூ.453 கோடி ரூபாயை நான்கு வாரத்துக்குள் கொடுங்கள்; இல்லாவிட்டால் ஜெயில் தண்டனை அனுபவிக்கத் தயாராக இருங்கள்’ என்று அனில் அம்பானியைக் கடுமையாகவே எச்சரிக்கை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

எரிக்ஸன் நிறுவனம், அனில் அம்பானி மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில்தான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்ற அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கிறார் அனில் அம்பானி. ரூ.118 கோடி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. இது தவிர, வருமான வரித் துறையிடமிருந்து ரூ.260 கோடி வந்திருக்கிறது.

ஆனால், ரிலையன்ஸ் கம்யூனி கேஷனுக்குக் கடன் தந்த நிறுவனங்கள் புகார் செய்ததன் விளைவாக, அவருடைய முக்கியமான வங்கிக் கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து ரூ.200 கோடியை உடனடியாக விடுவிக்கக் கடன் தந்த நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close