கம்பெனி டிராக்கிங்: கொரமண்டல் இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: COROMANDEL) | Company tracking: Coromandel International - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

கம்பெனி டிராக்கிங்: கொரமண்டல் இன்டர்நேஷனல்! (NSE SYMBOL: COROMANDEL)

ந்தியாவின் மிகப் பெரிய பாஸ்பேட் சார்ந்த உரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் கொரமண்டல் இன்டர்நேஷனல். இந்த நிறுவனம் முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்தியாவில் செயல்படும் பாஸ்பேட் சார்ந்த உரங்களை உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நிறுவனம் இது. இந்த நிறுவனம் உரங்கள், பயிர்களுக்குச் சிறப்பு ஊட்டம் அளிக்கும் மருந்துகள், பயிர்பாதுகாப்பு மற்றும் இவற்றைச் சில்லறை வர்த்தகம் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு சுமார் நான்கரை மில்லியன் டன் அளவிலான பல்வேறு வகையான உரங்களை உற்பத்தி செய்து, இந்தவகை உரங்களுக்கான சந்தையில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது எனலாம்.

முழுமையான பயிர்களுக்கான ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனமாகத் திகழவேண்டும் என்ற கொள்கையுடன் இந்த நிறுவனம் ஆர்கானிக் முறையிலான சிறப்பு ஊட்டச்சத்துகளையும் (ஸ்பெஷாலிட்டி நியூட்ரியன்ட்ஸ்) உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. பயிர் பாதுகாப்பு பிரிவில் பூச்சிக்கொல்லி, பூஞ்சைக்கொல்லி, களைக்கொல்லிகள்  போன்றவற்றை உற்பத்தி செய்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது.

[X] Close

[X] Close