ஷேர்லக்: விலை வீழ்ச்சியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் நிறுவனர்கள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/02/2019)

ஷேர்லக்: விலை வீழ்ச்சியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்... வாங்கிக் குவிக்கும் நிறுவனர்கள்!

ஓவியம்: அரஸ்

“தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமையும் வரை சந்தையின் போக்கைச் சரியாகக் கணிப்பது சவாலாகத்தான் இருக்கும்” என்று யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டே நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ஆர்டர் செய்து தயாராக வைத்திருந்த சாத்துக்குடி ஜூஸை அவருக்குக் கொடுத்தோம். வாங்கிப் பருகிக்கொண்டே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.
 
டெக் மஹிந்திரா முதன்முதலாக பைபேக் செய்யும் நடவடிக்கையை எடுத்திருக்கிறதே!

‘‘டெக் மஹிந்திராவின் இயக்குநர்கள் குழு, முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்க (பைபேக்) ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த நிறுவனம் பைபேக் வருவது இதுவே முதல்முறையாகும்.
ஏற்கெனவே முன்னணி ஐ.டி நிறுவனங் களான டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் போன்றவை பைபேக் வந்திருக் கின்றன. பங்கு ஒன்றின் விலை ரூ.950 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது சந்தை விலையைவிட 16% அதிகமாகும். மொத்தம் ரூ.1,956 கோடி மதிப்புள்ள 20.585 மில்லியன் பங்குகளை இந்த நிறுவனம் வாங்குகிறது. இது இந்த நிறுவனத்தின் நிகர மதிப்பில் 9.2% ஆகும்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close