இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில்..? | India's growth in the next 10 years? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில்..?

லகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகம் இப்படியே தொடருமா என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கவே செய்கிறது.

இந்தக் கேள்விக்குப் பதில் தரும்விதமாக சென்னை மைலாப்பூரில் உள்ள பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ‘இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் எப்படி இருக்கும்?’ என்கிற தலைப்பில் நடந்த  இந்த நிகழ்ச்சியில் திட்ட கமிஷனின் முன்னாள் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் மான்டேக் சிங் அலுவாலியா பேசினார். “தற்போதிருக்கும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3-லிருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் 7.5 சதவிகிதமாக உயரவேண்டும். அப்போதுதான் நாட்டிலுள்ள மிக முக்கியமான பிரச்னைகளான வேலை வாய்ப்பு மற்றும் விவசாயத் துறைச் சார்ந்த துயரங்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும். வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமையும் இந்தியாவுக்குக் கிடைக்கும்” என்று அதிரடியாக ஆரம்பித்தார்.

“தற்போதைய நிலையில், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் காணப்படுகிறது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நிலை உறுதுணையாக இருக்காது. நிதிப் பற்றாக்குறையைக் கையாள்வது மிகப் பெரிய சவால்தான் என்றாலும், அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு எதுவாக இருந்தாலும், இந்தப் பிரச்னையை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போதைய அளவைவிட அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைநிற்கும்.

[X] Close

[X] Close