ஷேர்லக்: எண்ணெய்ப் பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்டுகள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/03/2019)

ஷேர்லக்: எண்ணெய்ப் பங்குகளை வாங்கிக் குவித்த ஃபண்டுகள்!

ஓவியம்: அரஸ்

‘‘வேட்பாளர் பட்டியல் வெளியா யிடுச்சா?’’ என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.  வேட்பாளர் பட்டியலை அவருடைய வாட்ஸ்அப்-க்கு அடுத்த நிமிஷம் நாம் அனுப்ப, அதை வேகமாக ஒரு ஓட்டு ஓட்டிவிட்டு, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார். 

பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்துவரும் நிலையில், கடன் பத்திர முதலீடுகளிலிருந்து அவர்கள் வெளியேறியது ஏன்?

‘‘இந்தியக் கடன் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி அதிகரித்திருந்தது. அரசுக் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டு வரம்பு ரூ.3,60,800 கோடியாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களின் மீதான முதலீட்டு வரம்பு ரூ.2,89,100 கோடி யாகவும் அதிகரித்தது. ஆனால், அரசுப் பத்திரங்களின் முதலீட்டு வரம்பில் பாதி அளவையும், கார்ப்பரேட் பத்திரங்களின் முதலீட்டு வரம்பில் 70 சதவிகிதத்தையும் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close