பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/03/2019)

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தின் வேகமான நகர்வுக்குப் பின்னர், பங்குச் சந்தைக் குறியீடுகள் தற்போதைய ஏற்றமான போக்கை எடுத்துள்ளன. கடந்த வாரம் நாம் கொண்டிருந்த தனிச் சிறப்பான நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இது மிகவும் சாதாரணமானதுதான். பேங்க் நிஃப்டி, ஏற்கெனவே முக்கியமான பகுதிகளுக்குமேல் இருப்பதோடு, நிஃப்டியுடன் ஒப்பிடுகையில் அதை  வலுவானதாகவும் ஆக்கியுள்ளது. நிஃப்டி சரியாக 11490 புள்ளிகளின் தடை நிலை பகுதிக்குள் இருக்கும் நிலையில், அடுத்த வாரம் அது எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை நாம் கண்காணிக்க வேண்டியதுள்ளது.  அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகித உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ள நிலையில், அது வளரும் நாடுகளின் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதாகச் செயல்பட வேண்டும். எனவே, சந்தையின் இறக்க நிலையைப் பங்குகளை வாங்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.