ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு... இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? | Trump Announcement What impact is there in India? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு... இந்தியாவில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

ஆர்.மோகனப் பிரபு, cfa

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் மீதான சுங்கவரி மேலும் அதிகரிக்கப்படும் என இந்த வாரத் தொடக்கத்தில் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, வர்த்தக யுத்தம் மீண்டுமொருமுறை தொடங்கும் என்ற அச்சம், பன்னாட்டு பங்குச் சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது. குறிப்பாக, ஏற்றுமதியைச் சார்ந்துள்ள ஆசிய நாடுகளின் பங்கு சந்தைகள் கடந்த வாரத்தில் பெருமளவில் சரிந்தன. சீனத் துணைப் பிரதமரின் அமெரிக்க விஜயம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், பதற்றத்தை ஓரளவுக்குத் தணிக்க உதவும் என்ற முதலீட்டாளர் களின் சிறிதளவு நம்பிக்கையும் சிதைந்துபோகும் வகையில், சீனாவுடனான வர்த்தகப் பேச்சு வார்த்தை முறிவடைந்தது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் இரண்டு நிலைத் தகவல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, பல நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் கணிசமான  அளவுக்கு இறக்கம் கண்டன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் காரணமாக, இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று  பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க