குறையும் வாகன விற்பனை... என்ன காரணம்? | Car sales decline in March and first quarter of 2019 - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/05/2019)

குறையும் வாகன விற்பனை... என்ன காரணம்?

ந்தியத் தொழில்துறையின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் துறை. இதில் ஏற்படும் தேக்கம், இந்தியாவின் ஜி.டி.பி-யை நேரடியாகப் பாதிக்கும். கடந்த ஆண்டு அனைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் விற்பனையில் வளர்ச்சியடைந்த நிலையில், 2018 டிசம்பர் முதல் வாகனங்களின் விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்துவருகிறது. கடந்த ஜனவரியில் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை சிறிது முன்னேற்றம் கண்ட போதும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வாகன விற்பனை குறைந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவின் முக்கியமான ஆறு நிறுவனங்கள் சேர்ந்து விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 2,27,434 மட்டுமே. கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடும்போது, இது 16% குறைவு.