திடீர் செலவுகளைச் சமாளிக்க... எந்தக் கடன் பெஸ்ட்? | Best debt for Unexpected Expenses - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/05/2019)

திடீர் செலவுகளைச் சமாளிக்க... எந்தக் கடன் பெஸ்ட்?

திடீர் செலவுகள் எப்போது வேண்டு மானாலும் வரலாம். அப்படி வரும்போது, இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நண்பரிடம் வாங்கும் கடன், வட்டிக்குக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கிரெடிட் கார்டு கடன், காப்பீட்டுக் கடன் மற்றும் பங்கு அடமானக் கடன் எனப் பல வகைகளில் அவசர கால கடன்கள் இருந்தாலும், இதில் எது சிறந்தது என்பதில் பலருக்கும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. அவசர காலத்தில் எந்தக் கடனை வாங்கினால் நல்லது என்று முடிவெடுக்க முடியாமல் எங்கேயோ கடன் வாங்கி, அதிக அளவில் வட்டி கட்டி பெரும் இழப்பினைச் சந்திக்கிறோம். திடீர் செலவுகளைச் சமாளிக்க எந்தவகையான கடனை வாங்கினால் லாபகரமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.