மருந்தில்லா மருத்துவம் - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இரைப்பையும், இரைப்பை வியாதிகளும்!

ஜீரண மண்டலத்தில், உணவைச் செரிமானம் செய்யும் முக்கிய உறுப்பு, இரைப்பை. இது, வயிற்றின் மேல் பாகத்தில் இடதுபுறமாக அமைந்துள்ளது. தற்போது, இரைப்பை சம்பந்தப்பட்ட வியாதிகள் பரவலாக ஏற்படுகின்றன.

இரைப்பை, உணவைச் செரிமானம் செய்யும். இந்த உறுப்பு ஒரு பை வடிவில் இருப்பதால், இதை ‘இரைப்பை’ என்கிறோம். நீர், உணவு இவற்றை உட்கொள்ளும்போது, நேராக அவை உணவுக்குழாய் மூலம் இரைப்பையை அடைகின்றன. இந்த இரண்டு உறுப்புகள் சேருமிடத்தில் ‘ஸ்பிங்ட்டர்’ (Sphincter) என்கிற வால்வு உள்ளது. இது உணவு, நீர் ஆகியவை இரைப்பையை அடையும்போது மட்டுமே திறக்கும். மற்ற நேரங்களில், மூடியே இருக்கும். இரைப்பை வலுவான தசைகளால் ஆனது. இதன் உள்பாகம் மென்மையான சுரப்பிகளைக் கொண்டது. செரிமானத்துக்குத் தேவையான என்சைம் மற்றும் ஹைட்ரோகுளோரிக்  அமிலத்தை இதன் செல்கள் சுரக்கின்றன. இவை எல்லாம் ஒருங்கிணைந்து தம் பணியைச் செய்தால், இரைப்பைக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்காது.

இரைப்பையின் இயக்கம், அதன் பணி எல்லாம் மணிப்பூரகச் சக்கரத்தின் இயக்கத்தைச் சார்ந்தது. மணிப்பூரகச் சக்கரம் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பைச் சார்ந்தது. சமைத்த உணவை உண்டாலும், மணிப்பூரகச்  சக்கரத்தைச் சார்ந்த நெருப்பின் உதவியால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

அக்குபஞ்சர் தத்துவப்படி, ஜீரண மண்டலத்தில் முக்கிய உறுப்பான இரைப்பையில், காலை 7-9 மணி அளவில் செரிமானத்துக்குத் தேவையான ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் என்சைம்கள் சுரக்கின்றன. இரைப்பை சரிவர தன் பணியைச் செய்ய, மேற்கூறியவை ஒருங்கிணைந்து இயங்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick