செல்போன் டிரைவிங்... நரகத்துக்கான பயணம்!

உலக விபத்து தடுப்பு விழிப்புஉணர்வு தினம் - அக்டோபர் 17

வேகமாக வாகனம் ஓட்டிய, வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்திய சில இளைஞர், இளம் பெண்களை போலீசர் அழைத்துவந்து ஒரு அறையில் தனித்தனியாக உட்கார வைத்தனர். என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.

“கார் டிரைவ் செய்யும்போது மொபைல் உபயோகிப்பீர்களா?”

வந்தவர்களில் அனைவருமே எல்லோரும் சிரிக்கிறார்கள்... அது உறுதியாக “ஆம்” என்பதற்கான வெளிப்பாடு.

அடுத்த கேள்வி “ஏன்?”

இளைஞர், இளம்பெண்கள் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லினர். அது,

“வாட்ஸ் அப்”, “ஃபேஸ்புக்”, “இன்ஸ்டாகிராம்”

“என்னால் ஒரு விநாடி கூட மெசேஜ் அனுப்பாமல் இருக்க முடியாது...” என பலரும் பல விஷயங்களை சொல்கிறார்கள்.

ஒரு இளம் பெண்ணிடம் வாகனம் ஓட்டும்போது, “மொபைலில் போட்டோ பார்ப்பீர்களா? அல்லது போட்டோ எடுப்பீர்களா?”

“ஹா ஹா ஹா... ஆக்சுவலி... ட்ரைவிங்கில் போட்டோ எடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

“இப்படி செய்வதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதே?”

“இல்லை எனக்கு அது பழகிவிட்டது. அதனால் ரெண்டையும் என்னால் சரிவர செய்ய முடியும்.” பலரும் சொன்னது.

“இந்தப் பழக்கத்தை உங்களால் நிறுத்த முடியமா?” என்ற கேள்விக்கு, அனைவரும் ஒருமித்த குரலில் “சத்தியமாக முடியாது” என்கின்றனர்.

“சரி... உங்களுக்கு ஒரு தோழியை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் பெயர் ஜேசி...” என்றதும், ஒவ்வொருவரும் சிரித்துக் கொண்டே ஒரு ஆச்சர்யத்தோடு கதவை நோக்குகிறார்கள். அவர்களின் ஆச்சர்யம்... அதிர்ச்சியாக மாறுகிறது... ஒரு விநாடியில் அவர்களின் சந்தோஷ சிரிப்பு... மெல்லிய புன்னகையாக மாறுகிறது. அதில் கொஞ்சம் வலியும், பரிதாபத்திற்கான கரிசனையும் இருக்கின்றன.

ஜேசி குட், தன் கால்களை கொஞ்சம் இழுத்து, இழுத்து நடந்து வந்தார். ஒரு கை உடலோடு சேர்ந்திருந்தது. அதில் எந்த அசைவுமில்லை. வாய் ஒரு பக்கம் கோணியிருந்தது. “உங்களோடு சில நிமிடங்கள் பேச வேண்டும்” என்று தொடங்குகிறார் ஜேசி குட்.

பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்திவரும் ஜேசி குட், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

“மே 18, 2008. அப்போது எனக்கு 21 வயது. கல்லூரி பட்டமளிப்பு விழா முடிந்து குடும்பத்தோடு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். நான்தான் காரை ஓட்டி வந்தேன். அப்போது, ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் ஓட்டுனர் போனில் பேசிக் கொண்டே வந்தார். சிக்னல் சிகப்பில் இருந்ததை கவனிக்காமல் திரும்பினார். 18 வீல்களைக் கொண்ட ஒரு ட்ரக், அடுத்து ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அதில் மோதாமல் தப்பிக்க, எங்கள் காரில் மோதினார். பெரிய மோதல்... அந்த விபத்தில் என் அப்பா, அம்மா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்...” ஜேசி  சொல்லும்போதே அனைவரின்கண்களிலும் கண்ணீர் கோக்கிறது.

“எனக்கும் மிகப்பெரிய காயம். நான்கு மாதம் மருத்துவமனையில் இருந்தேன். என்னுடைய உடல் ஒரு பக்கம் முழுவதும் செயலிழந்துவிட்டது.  ஒரு கையில் சாப்பிடுவது எப்படி... உடை மாற்றுவது... நடப்பது, பேசுவது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.  அனைத்தையும் புதிதாக கற்று கொண்டேன். அப்பா, அம்மா இல்லாமல் வாழ்வது எப்படி என்பதையும் கூட...” என்று ஜேசி தன் கதையை சொல்லி முடிக்கிறார்.

மருத்துவமனையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சுயநினைவின்றி இருந்திருக்கிறார் ஜேசி. தலை முதல் கால் வரை எலும்புகள் உடைந்து, மூளை திசுக்கள் மிகப்பெரிய தேசம் அடைந்து, உயிர் பிழைக்க 10 சதவிகிதம்தான் வாய்ப்பு என்ற நிலையில் சிகிச்சை பெற்றுவந்திருக்கிறார். முழுமையாக நினைவு திரும்பும்பியது ஜூலை 7. ஜேசியின் பிறந்த நாள் முடிந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. பிறந்த நாளுக்கு பெற்றோர் ஏன் வரவில்லை என்று குழப்பத்தில் இருந்திருக்கிறார் ஜேசி. பெற்றோருக்கு என்ன ஆனது என்று மருத்துவர்களிடம் பலமுறை கேட்டும் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick