காட்டிக்கொடுத்தா... தீர்த்துக்கட்டு!

போலீஸ் இன்ஃபார்மருக்கு நேர்ந்த கொடூரம்

த்தியின்றி ரத்தமின்றி தங் களது மதிநுட்பத்தை மட்டும் ஆயுத மாகப் பயன்படுத்தி கொள்ளை யடிப்பதில் வல்லவர்கள் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள். இந்தியா முழுக்கக் கைவரிசை காட்டிவரும் இவர்களைப் பற்றி தகவல் கொடுக்க அதே ஏரியாவைச் சேர்ந்த சிலர், போலீஸ் இன்ஃபார்மர்களாக உள்ளனர். இவர்களில் ஒருவரை சில தினங்களுக்கு முன், கொள்ளைக் கும்ப லைச் சேர்ந்த சிலர் கடத்திச் சென்று கைகளையும் தலையையும் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்ததைக் கண்டு திருச்சி மாவட்டமே கதிகலங்கிப்போனது.

 ராம்ஜி நகர் காந்திபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால், காவல் துறையினருக்குச் செல்லப்பிள்ளை. ராம்ஜி நகர் கொள்ளையர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் இவருக்கு அத்துப்படி. அதனால், கொள்ளையர் களைத் தேடி வெளிமாநில மற்றும் உள்ளூர் போலீஸார் ராம்ஜி நகருக்கு வரும்போது முதலில் வேணுகோபாலைத்தான் அணு குவார்கள். கொள்ளையை அரங்கேற்றியது எந்த டீம் என்ற தகவலைத் தெரிந்துகொண்டு அதிரடி நடவடிக்கையில் இறங்குவார்கள். அந்த அளவுக்கு போலீஸுக்கு நெருக்கமான ஒருவர்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!