'அவளு’ம் நானும்... பேசுகிறார்கள் பிரபலங்கள்..!

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி, ம.மோகன், சா.வடிவரசு

வீணா குமாரவேல், அழகுக்கலை நிபுணர்:

''2000 - 2001 காலகட்டம். நாங்க புதிதா பார்லர் தொடங்கியிருந்த காலம். எங்க பியூட்டி பார்லருக்கு வந்த ஒரு பெண், தான் கையில் கொண்டு வைத்திருந்த ஒரு மேகஸினை பார்லர்லயே மறந்துட்டுப் போயிட்டாங்க. அந்த டேபிளில் பல ஆங்கிலப் பத்திரிகைகள் பரவிக் கிடந்தாலும், அன்று பார்லருக்கு வந்த பலரும் அந்த மேகஸினையே எடுத்துப் புரட்டுவதும், படிப்பதுமா இருந்தாங்க. என்ன புத்தகம் அதுனு ஆவலோட எடுத்துப் பார்த்தேன். முதல் பார்வையிலயே பெண்களை ஈர்க்கும் நிறைய விஷயங்கள் கண்ணில் பட்டது. அந்த மேகஸின்... 'அவள்’. அன்றில் இருந்து நானும் அவள் விகடன் வாசகி. 'அவளி’ன் நேர்த்தியான 'லே அவுட்’டுக்கு நான் ரசிகை. சமீபத்தில் 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ தொடர் மூலமா நானும் 'அவளி’ல் பங்களிச்சது மகிழ்ச்சி. ஸ்ரீரங்கம், திண்டுக்கல், கரூர் என்று தமிழகம் முழுக்க இருந்து அந்த தொடருக்கு கிடைச்ச வரவேற்பு, எங்களை வியக்க வெச்சுடுச்சு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!