2,000 ரூபாய் கொடுத்தால் வாடகை 'கலைஞர்'

துரை பெரியார் பஸ் நிலையம் அருகில் திடீர் நகர் என்றொரு ஏரியா இருக்கிறது. சிட்டிக்குள் அமைந்திருக்கிற பக்கா கிராமம் இது. வீதியில் உட்கார்ந்தபடி பெண்கள் பேன் பார்ப்பார்கள். கைலி கட்டியபடி ஆண்கள் ஆடுபுலி ஆட்டம் ஆடுவார்கள். இதை எல்லாம் பொருட்படுத்தாமல், சிறுவர்கள் 'டயர் வண்டி' விடுவார்கள். வீதியில் நாட்டுக் கோழிகள் மேயும். மூத்திரத்தில் நனைந்த வாலால் மாடுகள் உங்களை ஒரு சாத்து சாத்தும். கொம்பில் கொக்கி போட்டுக் கட்டப்பட்ட சண்டைக் கிடாக்கள் அசை போட்டபடியே பயமுறுத்தும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!