குவதிலோப் தீவில் மதுரைவீரன் அம்மானை!

எழுத்தாளர் இந்திரன்

பிரெஞ்சு மொழி பேசும் கருப்பினம் வாழும் ஒரு கரீபியத் தீவு அது. ஆறு தலை​முறைகளுக்கு முன்னரே தமிழினம் அங்கே வேர்பதித்திருக்கிறது. இன்று ஆப்பிரிக்க, ஐரோப்பிய பண்பாட்டுக் கலப்புகளோடு தனது தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தைத் தொலைத்துவிடாமல் போராடி வாழ்கிறது அந்த இனம்.   

கொலம்பஸ் சுத்தமான குடிநீர் தேடி கரீபியக் கடலில் அலைந்தபோது 1493-ல் கண்டுபிடித்த தீவுகள்தான் 'குவதிலோப்’(GUADELOUPE) தீவுகள். இந்திய வம்சா வழியினரின் உலக அமைப்பான 'கோபியோ’ (GLOBAL ORGANISATION OF PEOPLE OF INDIAN ORIGIN)எனக்கு அனுப்பிய அழைப்பை ஏற்று நான் இந்தத் தீவுக்குப் பறந்தேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!