மனுநீதிச் சோழன் கதை உண்மையா?

திருவாரூர்

னுநீதிச் சோழன்... எப்போதும் தமிழ் நீதியின் அடையாளம். பசுவின் கன்றைக் கொன்ற குற்றத்துக்காகத் தன் மகன் மீது தேர்க் காலை ஏற்றி சம நீதியை நிலைநாட்டியவன். சிலப்பதிகாரம், இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சம் உள்ளிட்ட பல வரலாறு களில் மனுநீதிச் சோழனின் வரலாறு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போது ஏதேனும் ஆதாரம் மிச்சம் இருக்கிறதா?  

 

''மனுநீதிச் சோழனின் நினைவாக, பின்னர் வந்த சோழ மன்னனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்ட கல்லால் ஆன தேர் இன்னமும் இருக்கிறது'' என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த அறநிலையத் துறை உதவி ஆணையர் கஜேந்திரன். திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட விளாகத்தில் இருக்கும் கல் தேர் மண்டபம்தான் அவர் குறிப்பிடும் அடையாளம். மரத் தேரின் அமைப்பில்கொஞ்ச மும் மாற்றம் இல்லாமல் அச்சு அசலான கல் தேர். மண்டபத்தின் மேல் புறத்தில் மனுநீதிச் சோழனின் வரலாற்றை விளக்கும் சிற்பங்கள். இவை யாரால் நிறுவப்பட்டன? என்ன ஆதாரம்? வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான குடவாயில் பாலசுப்ரமணி யனைச் சந்தித்தோம்.

''திருவாரூர் கோயிலின் இரண் டாவது பிராகாரத்தில் தென்புற மதிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அது, கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரம சோழனால் அமைக்கப்பட் டது. இங்கண் நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன் என்ப வருக்கு திருவாரூரில் ஒரு மாளிகை கட்டிக் கொடுத்த விவரங்களை அந்தக் கல்வெட்டு சொல்கிறது.மனுநீதிச் சோழனின் அமைச்சராக இருந்த உபயகுலா மலனின் வம்சா வழி வந்தவர்தான் அந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன். இங்கண் நாடு என்றால், தற்போதைய எண்கண். பசு வந்து நீதி கேட்டவுடன், தன் மகனைத் தேர்க் காலில் இட்டுக் கொல்லும்படி தன் அமைச்சருக்கு உத்தரவிடுகிறான் மன்னன். ஆனால், அரசன் மகனைக் கொல்ல மனம் இல்லாமல், தன்னைத்தானே வாளால் மாய்த்துக்கொண்டு உயிர் துறந்தார் அமைச்சர் உபய குலாமலன். அவர் வம்சத்தில் வந்ததால்தான் சந்திர சேகரன் ஆதிவிடங்கனுக்கு மாளிகை கட்டிக் கொடுத் தான் விக்கிரம சோழன். இந்தக் கல் தேர் மண்டபம் அப்போது நிறுவப்பட்டு இருக்கலாம். அவனது கல்வெட்டு மூலமாகத்தான் மனுநீதிச் சோழனின் மகன் பெயர் பிரியவிருத்தன் என்பதும், அமைச்சர் பெயர் உபயகுலாமலன் என்பதும் நமக்குத் தெரிகிறது'' என்று விளக்கமாகச் சொன்னார்.

ஆனால், மலையளவு குற்றங்கள் செய்தாலும் அதை மறைத்து, மகன்களுக்கு மகுடம் சூட்ட நினைக்கும் நவீன காலத்தில்... மனு நீதிச் சோழனின் மண்டபமும், கல் தேரும்... நீதியின் நினைவுச் சின்னங்கள்!

-கரு.முத்து
படங்கள்: கே.குணசீலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick