ஆலயம் தேடுவோம்! -உமையவள் அமர்ந்த உமையாள்புரம்!


ஆலயம் தேடுவோம்!
 
பி.சுவாமிநாதன்
உமையவள் அமர்ந்த உமையாள்புரம்!
அறிந்திராத ஆலயங்கள்... அற்புத தகவல்கள்!
உமையாள்புரம் ஸ்ரீகாசிவிஸ்வநாதர்

கா
விரிக்கு இரு மருங்கிலும் ஏராளமான ஆலயங்கள் பெரும் புகழோடு திகழ்கின்றன. அதன் கரை நெடுக அமைந்திருக்கும்... ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடல் பெற்ற- அருந்தவ மகான்களால் வழிபடப்பட்ட _ திருக்கோயில்கள், தஞ்சை தரணிக்குக் கிடைத்த வரப் பிரசாதம்!

நாயன்மார்களால் பாடப்படாத திருக்கோயில் என்றால், அதைச் சற்றுக் குறைத்து மதிப்பிடும் சில ஆன்மிக அடியார்களும் இன்றைக்கு இருக்கிறார்கள். நாயன்மார்களால் பாடப் பெறாத எத்தனையோ திருக்கோயில்கள், புராண- வரலாற்றுக் கதைகளுடன் கலந்து, நிறைகுடமாக இன்றும் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று காவிரியின் வடகரையில் அமைந்திருக்கும் உமையாள்புரம் திருத்தலம்!

முருகப் பெருமானிடம் உபதேசம் பெறுவதற்காக சுவாமிமலைக்கு புறப்பட்ட ஈசன், தன்னுடன் வந்த உமையவளை, 'நீ இங்கேயே நிரந்தரமாக இரு!' என்று அமர வைத்து விட்டுச் சென்ற இடம்தான் உமையாள்புரம் என்கின்றன புராணங்கள்.
உமாதேவி என்றென்றும் உறைந்திருக்கும் இடம் என்கிற பொருளில், 'உமாபுரம்' என்று ஆதிகாலத்தில் வழங்கப்பட்ட இந்த தலத்தின் பெயர், பின்னாளில் உமையாள்புரம் என்றானதாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick