வளமுடன் வாழலாம்..! - 13

அன்பே தவம்!ஆர்.கே.பாலா

ங்கே நிம்மதி, எங்கே நிம்மதி என்று எங்கெல்லாமோ தேடித் திரிகிறோம். மலைப் பிரதேசங்களிலும், குளிர் தேசங்களிலும், பொழுது போக்குக் கூடங்களிலும், அருவிகளிலும் ஆறுகளிலும் நிம்மதியைத் தேடிப் பயணிக்கிறோம். அப்படிப் பயணித்து, 'அப்பாடா... இப்பத்தான் புத்துணர்ச்சியா இருக்கு’ என்று மகிழ்ச்சியோடு ஊர் திரும்புகிறோம். பத்து இருபது நாட்கள் கழித்து, மீண்டும் 'எங்கே நிம்மதி’ என்று பழையபடி தேடத் துவங்கிவிடுகிறோம்.

''உண்மையில் நிம்மதி என்பது, காட்டிலும் மேட்டிலும் இல்லை; அருவிகளிலும் குளிர் பிரதேசங்களிலும் இல்லை; நவீன தீம் பார்க் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் இல்லை. நிம்மதி என்பது நம் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறது. மனத்தினுள் உள்ள கசடுகளையும் கவலைகளையும் தூர எறிந்துவிட்டால், அங்கே நிம்மதியும் சந்தோஷமும் குடிகொள்ளும்!'' என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick